கள்ளக்குறிச்சி இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு
ADDED :4 minutes ago
கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமை சிறப்பாக சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.
செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தை குறைப்பதுடன், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறந்த வெற்றியை தரும் என்பது நம்பிக்கை. அதன்படி கள்ளக்குறிச்சி இந்திலி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமையொட்டி, சுவாமிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு வாசனை திரவியங்களால் மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா குருக்கள் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.