உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிர்காலம் துவக்கம்: வேத மந்திரம் முழங்க கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

குளிர்காலம் துவக்கம்: வேத மந்திரம் முழங்க கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

உத்தரகண்ட்: கேதார்நாத் கோவில் நுழைவு வாயில்கள் இன்று காலை 8:30 மணிக்கு மூடப்பட்டது. கருவறை மூடப்பட்டு, கோயிலின் தெற்கு வாசல் பூட்டப்பட்டுள்ளது.


குளிர்காலத்திற்காக, பாரம்பரிய சடங்குகள் மற்றும் வேத மந்திரங்களுடன் கேதார்நாத் தாமின் நுழைவு வாயில்கள் இன்று காலை 8:30 மணிக்கு மூடப்பட்டது இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் இங்கு கூடியுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள், சிவபெருமானை ஒருமுறையாவது தரிசிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அதேவேளையில், சிவபெருமானின் உற்சவ மூர்த்தியை (உற்சவ டோலி) தரிசிக்கவும், அது குளிர்கால இருப்பிடமான உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்குப் புறப்படுவதைக் காணவும் பக்தர்கள் குவிந்தனர். இன்றுடன் வருடாந்திர கோடைகால யாத்திரை நிறைவடைகிறது. இந்த ஆண்டு 64 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சார் தாம் புனிதத் தலங்களுக்கு வருகை தந்துள்ளனர்; இது ஒரு சாதனையான எண்ணிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !