உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 265 ஆண்டுகள் பழமையான அன்னக்கூடை திருவிழா: கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை பெற குவிந்த பக்தர்கள்!

265 ஆண்டுகள் பழமையான அன்னக்கூடை திருவிழா: கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை பெற குவிந்த பக்தர்கள்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் உள்ள புகழ்பெற்ற மதன் மோகன் மந்திரில், 265 ஆண்டுகள் பழமையான அன்னக்கூட் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1761-ம் ஆண்டு கோகுல் சந்திர மித்ராவால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், கோவர்த்தன மலையை கிருஷ்ணர் தூக்கி பக்தர்களைக் காத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கிருஷ்ணருக்கு பல்வேறு உணவு வகைகள் படைக்கப்பட்டன. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, கோயிலின் மாடங்களில் இருந்து பக்தர்கள் மீது பிரசாதமாக அரிசி தூவப்பட்டது. இதனைப் பெறுவதற்காக குடைகள், பைகள் மற்றும் துண்டுகளுடன் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இந்தப் புனிதப் பிரசாதத்தைப் பெற்றால் இறையருளும், குடும்பத்தில் செல்வச் செழிப்பும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !