கவுசிகாபுரி கால காலேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா
ADDED :15 minutes ago
கோவில்பாளையம்: கவுசிகாபுரி என்னும் கோவில்பாளையத்தில், பாடல் பெற்ற ஸ்தலமான கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும் காலகாலேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த 10-ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில் கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. வேள்வி வழிபாடுகள் நடைபெற்றன. அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், அறங்காவலர்கள், செயல் அலுவலர் ராமஜோதி, கட்டளைதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 15-ம் தேதி மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. வருகிற 16ம் தேதி காலை 9:15 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், மதியம் 12:00 மணிக்கு மயில்வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.