/
கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் பராமரிப்பு பணி ‘ஜரூர்’
தமிழ் புத்தாண்டில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் பராமரிப்பு பணி ‘ஜரூர்’
ADDED :1 hours ago
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு 20ம் ஆண்டு பாலாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி, ஆண்டுதோறும் விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு நாளான வரும் 14ம் தேதி காலை 10:30 மணிக்கு மேல், ஆஞ்சநேயர் சுவாமிக்கு 5 ஆயிரம் லிட்டர் பாலாபிேஷகம் நடைபெற உள்ளது. பாலாபிேஷகத்தை, அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள் துவக்கி வைக்கிறார். இதையொட்டி, சிலையின் நிறுவனரான தனுசு மேற்பார்வையில், ஊழியர்கள் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையில் பராமரிப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.