உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு

அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், தமிழ் புத்தாண்டு தினத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பது தொன்றுதொட்டு வரும் முக்கிய நிகழ்வாகும். அன்றைய தினம் அதிகாலை சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, சிவாச்சாரியார்கள் விநாயகர் சன்னதியில் வைத்து புதிய வருட பஞ்சாங்கத்தை வாசித்து, வரும் ஓராண்டுக்கான விழாக்கள் மற்றும் பலன்களை விவரிப்பார்கள். அதன்படி இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்பந்த விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்த பின் வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !