முக்குளம் செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :1 days ago
பெண்ணாடம்: முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. பெண்ணாடம், முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவில் செடல் திருவிழா, கடந்த 7ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று பகல் 12:00 மணியளவில் பக்தர்கள், 108 பால்குடம் ஏந்தி சென்றனர். மேலும், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி பிடாரி செல்லியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.