கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சர்வ ஏகாதசி ஆராதனை
ADDED :2 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சர்வ ஏகாதசி உற்சவம் நேற்று மாலை நடந்தது. அதனையொட்டி, உற்சவர் பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, கலசாபிஷேகமும் செய்து வைத்தனர். தொடர்ந்து, திவ்ய அலங்காரத்துக்குப்பின் பெருமாள் மண்டபத்தி ல் எழுந்தருளச் செய்து, சேவை, சாற்றுமுறை, சோடச உபசாரம், அலங்கார தீபங்களுடன் பூஜை நடந்தது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். இந்நாளில் விரதம் இருப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும் என்றும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.