1009வது உத்சவ திருவிழா: தங்க பல்லக்கில் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் உலா
ADDED :3 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில், 1009வது அவதார உத்சவத்தின் முதல் நாளான நேற்று, தங்க பல்லக்கில் ராமானுஜர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமானுஜரின் 1,000வது ஆண்டு அவதார விழா, 2017ல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, ராமானுஜரின் 1009ம் ஆண்டு அவதார விழா நேற்று துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில், ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் நாளான நேற்று, தங்க பல்லக்கில் எழுந்தருளிய ராமானுஜர், விதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா ஏப்., 21ல் நடக்க உள்ளது. அடுத்த பத்து நாட்கள் ஆதிகேசவ பெருமாள் பிரம்மோத்சவம் நடக்கும்.