உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் ராமசாமி கோயிலில் பொங்கல் சிறப்பு வழிபாட்டில் சுவாமி வீதியுலா நடந்தது.

கடையம் ராமசாமி கோயிலில் பொங்கல் சிறப்பு வழிபாட்டில் சுவாமி வீதியுலா நடந்தது.

ஆழ்வார்குறிச்சி:கடையம் ராமசாமி கோயிலில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் சுவாமி எழுந்தருளல் நடந்தது.கடையம் ராம பக்தசபா சார்பில் ராமசாமி கோயிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் ராமர், சீதை, லெட்சுமணன், அனுமன், கருடன் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் கூடிய தீபாராதனைகளை ராதாகிருஷ்ணஐயங்கார் நடத்தினார்.
மாலையில் சகஸ்கரநாம அர்ச்சனையும், பின்னர் ராமர், சீதை, லெட்சுமணன், அனுமன் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளலும், வீதி உலாவும் நடந்தது. முன்னதாக ராமர், சீதை, லெட்சுமணன், மூலவர் வெள்ளிக்காப்பு கோலத்தில் காட்சியளித்தனர். விழாவில் ராமபக்த சபாவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !