உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பை கர்நாடகா யாத்திரை முடித்து காஞ்சிபுரம் திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

மும்பை கர்நாடகா யாத்திரை முடித்து காஞ்சிபுரம் திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் வந்தடைந்தார். சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது


காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மும்பை மற்றும் கர்நாடகாவிற்கு கடந்த ஏப்ரல் 2 முதல் 14 வரை யாத்திரை சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். பல இடங்களில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டு, ஸ்ரீ சக்ர பூஜை மற்றும் அனுக்கிரக பாஷணம் நடத்தப்பட்டது. மும்பை மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு யாத்திரை சென்ற விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சிபுரம் திரும்பினார். சுவாமிக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !