மனதை வசப்படுத்து எப்படி சொல்கிறார் சிவானந்தர்
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.
* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.
* நல்ல குணம் கொண்டவர் வாழும் வீடு கோயிலுக்கு சமம்.
* சத்திய வழியில் நடப்பவர் வாழ்வில் அமைதி தவழும்.
* ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக உயிரைக் கூட தியாகம் செய்.
* கருணையே உயர்ந்த குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான செயல்.
* மனதில் அமைதி இருந்தால் வெற்றி உன்னைத் தேடி வரும்.
* பணிவும் எளிமையும் இருந்தால் தெய்வம் உன்னை தேடி வரும்.
* நல்லவர்களிடம் பழகு; நல்ல நுால்களை படி; பிறவிக்கடலை தாண்டலாம்.
* எந்த நிலையிலும் கடவுளை குறை சொல்லாதே.
* எது நல்லது, எது கெட்டது என்பதை அறிந்தவர் கடவுள் ஒருவரே.
* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டால் அன்பை உணரலாம்.
* மனதின் பக்குவத்திற்கு ஏற்ப கடவுளின் அருள் கிடைக்கும்.
* இரக்கம், அடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை ஆகியவையே வாழ்வின் ஆதார குணங்கள்.