உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாயி அம்மன் கோவில் திருவிழா: சிறப்பு அபிஷேக ஆராதனை

பெரியாயி அம்மன் கோவில் திருவிழா: சிறப்பு அபிஷேக ஆராதனை

பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னா பெரியாயி அம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்று சென்றனர்.


பந்தலூரில் அத்திக்குன்னா பகுதியில் பிரசித்தி பெற்ற, அருள்மிகு ஸ்ரீ பெரியாயி, ஸ்ரீ சடையனார், ஸ்ரீ தேவி காட்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. கடந்த 12-ம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2 ம் நாள் காலை 6 மணி முதல் அம்மனுக்கு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இரவு 12 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெரியாயி அம்மன், பாவாடைராயன், ஸ்ரீ தொட்டித்துச் சின்னான், ஸ்ரீ சங்கிலி கருப்பு, ஸ்ரீ முனி ஆகிய தெய்வங்களுக்கு, முப்பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று காலை ஆறு மணி முதல், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஸ்ரீ பெரியாயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்யப்பட்டதுடன், பந்தலூர் மற்றும் கூடலூர் மற்றும் சேலம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்று சென்றனர். பூஜைகளை கோவில் பூசாரி ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவிற்கான ஏற்படுகளை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் தங்கதுரை, பொருளாளர் சிவா தலைமைதான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !