உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்.,29 ல் தேரோட்டம் நடக்கிறது. ஆண்டு தோறும் ஒரு தேரில் பிரியாவிடையுடன் வல்மீகநாதர் அமர்ந்த தேரை மட்டும் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த ஆண்டு மற்றொரு தேரில் பாகம்பிரியாள் அம்மன் தேர் வலம் வரும் வகையில்  நன்கொடையாளர்களால் புதிதாக தேர் உருவாக்கப்பட்டது. அதற்கான வெள்ளோட்டம் இன்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏப்.,29 ல் 2 தேர்கள் வலம் வருகின்றன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !