உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு அமாவாசை சிறப்பு அலங்காரம்

திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு அமாவாசை சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  ள்பாலித்தார்.  மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம், 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்டை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !