உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் ஆண்டு விழா

தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் ஆண்டு விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, 108 சங்காபிேஷக விழா வரும், 29ம் தேதி நடக்கிறது.

விழாவையொட்டி காலை, 6:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், கோ பூஜை, 8:00 மணிக்கு சிறப்பு அஷ்டாபிேஷகம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு களபாபிேஷகம், கலசாபிேஷகம் நடக்கிறது.

மாலை, 6:00 மணிக்கு அலங்கார பூஜை, மஹா தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

இரவு, 10:50 மணிக்கு ஹரிவராசனம், நடை சாற்றுதல் நடக்கிறது. மேலும், மாலை 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை பொள்ளாச்சி, ‘நந்தி இசை’ குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் குள்ளக்காபாளையம் ஸ்ரீ ஹரிகந்த ஸ்ருதி பஜனை குழு சார்பில், சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !