உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் ரூ.103 கோடியில் பணிகள் அதிகாரிகள் ஆய்வு

முருகன் கோவிலில் ரூ.103 கோடியில் பணிகள் அதிகாரிகள் ஆய்வு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், மலைக்கோவிலில் மூன்று அடுக்கு அன்னதான கூடம், ராஜகோபுரத்திற்கு இணைப்பு படிகள், வாகன நிறுத்தம் இடம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இதை பார்வையிட்ட ஹிந்து அறநிலையத் துறையின் தலைமை பொறியாளர் பெரியசாமி, ஒப்பந்ததாரர்களிடம், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, நேற்று அறிவுறுத்தினார்.

அவருடன் வடிவமைப்பாளர் கலைச்செல்வி, செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் நேதாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !