உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் பத்மகிரீஸ்வரர் கோயிலில் 12 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் முன்னிலையில் மேளவாத்தியம், சிவநாம கோஷம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. ஒரு டன் பூக்கள், பழங்களால் தோரணம், பந்தல் அமைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏப்.,20 முதல் ஏப்.,23 வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்க உள்ளது. ஏப்.,28ல் திருக்கல்யாணம், ஏப்.29ல் திருத்தேர் வடம் பிடித்தல், ரதவீதி புறப்பாடு, ஏப்.30ல் தீர்த்தவாரி நடக்க உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று கோயில் வளாகத்தில் 3006 பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட விளக்கு பூஜை, கிரிவலம் நடக்க உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !