உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநானக் தேவ் குருத்வாரா கோவிலில் கவர்னர் வழிபாடு

குருநானக் தேவ் குருத்வாரா கோவிலில் கவர்னர் வழிபாடு

 அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் குரு நானக் தேவ் குருத்வாரா சீக்கியர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார்.


அரியாங்குப்பத்தில் குருநானக் தேவ் குருத்வாரா சீக்கியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பஞ்சாப் மாநில புத்தாண்டையொட்டி நேற்று மதியம் சிறப்பு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன், வழிபாட்டில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் வினாயகமூர்த்தி, சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மதியம் பஞ்சாப் மாநில பராம்பரிய முறைப்படி உணவு வழங்கப்பட்டது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !