ஆனைமலை வல்லப ஸ்ரீமஹாகணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா
பொள்ளாச்சி: ஆனைமலை சங்கிலி கருப்பண்ணசுவாமி கோவிலில் புதியதாக கட்டப்பட்ட வல்லப ஸ்ரீமஹா கணபதி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை அம்பராம்பாளையம் ஆற்றங்கரை சங்கிலி கருப்பண்ணசுவாமி கோவிலில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட வல்லப ஸ்ரீமஹா கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி மஹா கணபதி பூஜையுடன் துவங்கியது. கடந்த, 19ம் தேதி அனுக்ஞை, மஹா கணபதி பூஜை, கணபதி ேஹாமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும்; மதியம், 1:30 மணிக்கு வல்லப ஸ்ரீமஹா கணபதிக்கு, 16 வகையான அபிேஷகம், கொடுமுடி தீர்த்தம் விடுதல், சுவாமிக்கு கண் திறந்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கோபுர கலசம் நிறுவுதல், வல்லப ஸ்ரீமஹா கணபதியை யந்திர பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக சாலையில் கலசங்களை நிறுவுதல், முதல் கால யாக வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் புண்யாகவாசனம், வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும்; காலை, 9:30 மணிக்கு வல்லப ஸ்ரீமஹா கணபதிக்கு விமான கும்பாபிஷேகம், கலச தீர்த்தம் விடுதல் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிேஷக விழாவை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து, தசதானம், தசதரிசனம், மஹா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.