நந்திகேஸ்வரர், கிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள் உலா: ஏப்., 28 திருக்கல்யாணம்
ADDED :158 days ago
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் நந்திகேஸ்வரர், கிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள் உலா வந்தனர்.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டு தினமும் சுவாமி, அம்பாள் வீதி வலம் வருகின்றனர். நேற்று இரவு நந்திகேஸ்வரர் வாகனத்தில் பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி மற்றும் கிளி வாகனத்தில் விசாலாட்சி அம்மன் உட்பட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்., 28 அன்று காலை 10:45 மணி முதல் 11:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் சித்திரை தேரோட்டமும் நடக்க உள்ளது.