உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஆண்டுக்கு இரு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகிறது. நடப்பாண்டிற்கான சித்திரை பிரமோத்சவம், இன்று அதிகாலை கொடியற்றத்துடன் துவங்கியது. முதல் நாளான இன்று காலை, தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 1ம் தேதி வரை, தினமும் காலை – மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார். நாளை கருடசேவையும், வரும் 28ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !