நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வழிபாடு
ADDED :12 hours ago
நெல்லிக்குப்பம்: ராமானுஜர் ஜெயந்தி சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம், பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு இன்று ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.