கோவை தண்டுமாரியம்மனுக்கு சக்தி கரகம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :12 hours ago
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ஏந்தியும், அலகு குத்தியும் பால்குடம் சுமந்தும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை 7 மணிக்கு பெரியகடை வீதி கோனியம்மன் கோயிலிலிருந்து சக்திகரகங்கள், அக்னிசட்டி ஏந்திய ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க நடந்தது. பெரியகடைவீதி கோனியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, மில் ரோடு, தியாகராய புதுவீதி, சிரியன் சர்ச் சாலை, கிருஷ்ணசாமி முதலியார் சாலை வழியாக அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக கோயிலை அடைந்தது. ஊர்வலத்துக்கு முன் சாலை தண்ணீர் ஊற்றி குளிர்விக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர், போலீசார் ஊர்வலத்துக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து சென்றனர். பக்தர்களுக்கு குளிர்பானங்கள், நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டன.