உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர்

வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர்

செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. சித்திரை மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது.  தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது..




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !