உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி வருஷாபிஷேகம்

புத்தேரி பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி வருஷாபிஷேகம்

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது.


இதனை முன்னிட்டு, வரும் 26ம் தேதி மாலை கணபதி ஹோமம், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, இரவு 8:00 மணியளவில் முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 27ம் தேதி காலை 8:00 மணியளவில் விசேஷ ேஹாமம், சுதர்சன நரசிம்ம தன்வந்திரி மகாலட்சுமி ேஹாமம், காலை 10:30 மணியளவில் கடம் புறப்பாடு, விமானத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மூலவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள செங்கமலத்தாயார், ஆண்டாள் நாச்சியார், மகா மாரியம்மன், ஆஞ்சநேயர், சந்திரமவுலீஸ்வரர், வெற்றி விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !