திருவாடானை எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா
ADDED :172 days ago
திருவாடானை: திருவாடானை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக பூரணை, புஷ்கலை அம்பாளுடன் அய்யனார் வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளினார். பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. தேவஸ்தான அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.