எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு சொல்கிறார்: சாரதா தேவியார்
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.
* இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.
* உலக வாழ்வில் பற்று குறைய குறைய மனம் அமைதி பெறும்.
* உண்மையே என்றாலும் விரும்பத் தகாததை தேவையின்றிச் சொல்லாதே.
* உலகம் உன் கைகளில் தான் உள்ளது. யாரும் அந்நியர் இல்லை.
* தைரியத்தை இழக்காதே. வழிபாடு செய். உரிய நேரத்தில் பலன் பெறுவாய்.
* சாதனை படைக்க ஏற்ற காலம் இளமைப்பருவம்.
* மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளைச் சிந்திப்பதே தியானம்.
* உன்னிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்.
* மனதில் அன்பு இருந்தால் கடவுளை உணரலாம்.
* சாத்தியம் இல்லாததையும் சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு.
* அமைதிக்கு நிகரான புதையல் வேறில்லை
* தைரியத்துக்கு நிகரான பரிசு எங்குமில்லை.
* உன் இதயத்தை வீண்மீன்கள் போல துாய்மையாக வைத்திரு.
* சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதே.
* இடைவிடாமல் கடவுளின் பெயரை ஜபித்திடு.
* மனமும் உடலும் நலமுடன் இருக்க எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு.