தூங்கா புளியமரம்!
ADDED :4614 days ago
திருநெல்வேலி குட்டம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஆடிப்பெரு விழா வெகுப்பிரசித்தம். இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், தலவிருட்சமான தூங்கா புளியமரம். தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த விருட்சம் இது. வெளியூர் செல்லும் பக்தர்கள், இந்த புனித மரத்தின் இலைகளையும் கூடவே எடுத்துச் செல்கிறார்கள். இதனால் தங்களது பயணம் பாதுகாப்பாக அமையும் என்பது அவர்களது நம்பிக்கை!