உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  தைலாபுரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

 தைலாபுரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

வானுார்: வானுார் அருகே தைலாபுரம் கோவிலில் பிரமோற்சவத்தையொட்டி நடந்த தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். வானுார் அடுத்த தைலாபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன், கூத்தாண்டவர் சுவாமி கோவில் பிரமோற்சவ விழா கடந்த 17 கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அம்மனுக்கு துவஜாரோகணம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 18ம் தேதி கிருஷ்ணன் லீலையும், 19ம் தேதி இந்திரவிமானத்தில் வீதியுலாவும் நடந்தது. 20ம் தேதி அம்மனுக்கு பின்னமர சேவையும், 21ம் தேதி பஞ்சபாண்டவர் ரத சாரதியில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 22ம் தேதி அர்ஜூனன் ஜலகிரீட புஷ்ப பல்லக்கிலும், 23ம் தேதி முதல் நாள் பக்காசூரனுக்கு சோறு போடுதல். 24ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம். 25ம் தேதி கரக உற்சவம், 26ம் தேதி தபசு உற்சவம், அரவான் கடபலி நடந்தது. நேற்று தீ மிதி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !