உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு

ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு

அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை இன்று நடந்தது.


அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில், ஒவ்வொரு மாதமும், உத்திர நட்சத்திரத்தன்று, ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று இரவு ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ஐயப்பன் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !