உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் அருகே காஞ்சி பெரியவா கோயில் கட்டுமானம்

அழகர்கோவில் அருகே காஞ்சி பெரியவா கோயில் கட்டுமானம்

மதுரை: அழகர்கோவில் பொய்கைகரைப்பட்டி அரசு பள்ளி அருகே நேசம் கார்டனில் காஞ்சி பெரியவர் கோயில் கட்டும் பணி கடந்தாண்டு தொடங்கியது. அனுஷத்தின் அனுக்கிரகம் டிரஸ்ட் சார்பில் பணிகள் நடக்கின்றன. தற்போது சன்னதி நிலைக்கல் அமைக்கப்பட்டு கர்ப்பகிரக அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளன. டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும், கர்ப்ப கிரஹ விமானம், பரிவார சன்னதிகள், முன் மண்டபம், சுற்றுச்சுவர் பணிகள் மட்டும் பாக்கி உள்ளன என்றார்.


 


 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !