திருமலையில் தாரிகொண்ட வெங்கமாம்பா ஜெயந்தி விழா கோலாகலம்
திருமலை: ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் தீவிர பக்தையான மாத்ருஸ்ரீ தாரிகொண்ட வெங்கமாம்பாவின் 296-வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள், இன்று வியாழக்கிழமை மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டங்களில் அமைந்துள்ள பத்மாவதி பரிணய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து, திருமலையின் மாட வீதிகள் வழியாக வலம் வந்து விழா நடைபெறும் இடத்திற்கு எழுந்தருளினார். SV இசை மற்றும் நடனக் கல்லூரியைச் சேர்ந்த கலைஞர்கள், வெங்கமாம்பா இயற்றிய கீர்த்தனைகளைப் பாடி பக்திப் பஜனை நிகழ்ச்சியை வழங்கினர். இந்நிகழ்வில், புஷ்பகிரி பீடாதிபதி ஸ்ரீ வித்யா சங்கர பாரதி சுவாமிகள் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். கோவில் துணை செயல் அலுவலர் லோகநாதம், திருப்பதி எஸ்டேட் அதிகாரி சுவர்ணம்மா, பிற அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். திருப்பதிதேவஸ்ாசன அதிகாரிகள் மற்றும் வெங்கமாம்பாவின் வாரிசுகள், திருமலையில் அமைந்துள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.