உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.


தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 12ல் துவங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவை காண வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  வருவார்கள். கோயிலில் திருவிழாவிற்காக ஏப்., 22 ல் கம்பம் நடப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் பலரும் வீரபாண்டி பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அக்னிசட்டி எடுத்து வேண்டுதல் நிறைவேற்ற உள்ள பக்தர்கள் கோயிலுக்கு வந்து கைகளில் காப்பு கட்டி விரதம் துவக்குகின்றனர். செவ்வாய், வெள்ளி நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !