உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை முத்து விநாயகர், கஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு

கோவை முத்து விநாயகர், கஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு

கோவை: கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் 34 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து விநாயகர் ஸ்ரீ கஞ்சி மாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் முதலாம் ஆண்டு வருடாந்திர விழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமம் மகாலட்சுமி சுதர்சன மிருதஞ்ய ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் காப்பு கட்டுதல் ஆகியன நடைபெற்றது. நிறைவாக அன்னதானம் நடந்தது. வெள்ளிக்கிழமை 1ம் தேதி சக்தி கரகம் பால்குடம் தீர்த்த குடம் ஆகியன ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் அலங்கார தீபாரதனை ஆகியன நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது நிறைவு இன்று சனிக்கிழமை மஞ்சள் நீராடுதல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது இந்த நிகழ்வில் மூலவர் அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !