உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ராம் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை உற்சவம் நிறைவு

கோவை ராம் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை உற்சவம் நிறைவு

கோவை: ராம் நகர் விவேகானந்தர் ரோடு வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 44 ம் ஆண்டு சித்திரை  உற்சவ விழா கடந்த 21-042026 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது தொடர் நிகழ்வாக அக்னி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 108 திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.இதில் மூலவர் அம்மன் ஆந்திர மாநிலம் விஜயவாடா ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரத்திலும்  உற் சவர் வெள்ளிகாப்பு கவசத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !