மானாமதுரை சித்திரை திருவிழா: சந்தன காப்பு உற்சவத்துடன் நிறைவு
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை திருவிழா சந்தன காப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் உருவாகுவதற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கடந்த மாதம் 21ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இதனை தொடர்ந்து சுவாமிகள் தினம் தோறும் சிம்மம் கமலம் யானை கிளி குதிரை மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 28ம் தேதி 29ம் தேதி 70 வருடங்களுக்குப் பிறகு 2 பெரிய தேர்களில் தேரோட்ட விழாவும் நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று இரவு சந்தன காப்பு அலங்காரத்துடன் சுவாமிகள் கோயிலின் உள்பிரகாரத்தில் பக்தி உலாவுதல் நிகழ்ச்சியுடன் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகர் சோமசுந்தர பட்டர் மற்றும் சிவாச்சாரியார்கள்,பக்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.