உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கையம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கெங்கையம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வாலாஜாபாத்: பழையசீவரம், கெங்கையம்மன் கோவிலில் சித்திரை விழாவில், நேற்று பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கெங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அப்போது அப்பகுதி பெண்கள் பந்தகால் மர கம்பத்திற்கு குங்குமம், மஞ்சள் வைத்து தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர். அதை தொடர்ந்து, நேற்று காலை கங்கையில் இருந்து அம்மன் திரட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையிலிட்டனர். மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழா நடந்தது. இரவு 7:00 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !