விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக திருவிழா
ஊட்டி: ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவில், குருத்துக்குளி பசவக்கல்லில் உள்ள சித்தி விநாயகர் கோவில்களில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. ஊட்டி குருத்துக்குளி பசவக்கல்லில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கற்பகிரக கோபுர விமானம், பரிகார மூர்த்தி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் கடந்த 16ம் தேதி துவங்கிய விழாவில், மாதேஸ்வரர் கோவிலிலிருந்து தீர்த்தகுடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹனம், ரக்ஷாபந்தனம், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், மண்டப அர்ச்சனை, திரவியாகுதி, பூர்ணாகுதி, உபசார பூஜை, தீபாராதனை, பிரசாõத வினியோகம், இரவு 10:00 மணிக்கு எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம் நடந்தது.நேற்று 18ம்தேதி காலை 7:00 மணிக்கு காலபூஜை, நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், தீபாராதனை, காலை 9:00 மணிக்கு கலசங்கள் கோபுரம் வலம் வருதல், விமானம் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.பகல் 11:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, தசதரிசனம், இரவு 7:00 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. சர்வ சாதகங்களை ஊட்டி காந்தல் காசி விஸ்வ நாத சுவாமி கோவில் சரவண குருக்கள் மேற்கொண்டார்.* ஊட்டி லோயர் பஜாரில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் புணராவர்த்தன ஜீர்ணோத்தரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா நடந்தது. காலை 7:30 க்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் காலயாகபூஜை ஆரம்பம், ஸ்பரஷாஹீதி, த்ரவ்யாஹீதி, மகாபூர்ணாஹீதி, தீபாராதனை, 9:20 மணிக்கு யாத்ரா தானம் கடம் திருக்கோவில் வலம் வருதல், 9:35மணிக்கு கும்பாபிஷேகம் 9:50மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரக மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம், அர்ச்சனை பிரசாதம் வழங்குதலும், மாலை 5:00 மணிக்கு திருவீதி உலாவும் நடந்தது. சர்வ சாதகங்களை ஊட்டி மாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாகமபாஸ்கர சரவணன் மேற்கொண்டார். ஏற்பாடுகளை, இந்து அறநிலைய அலுவலர்கள், கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.