செங்கழநீர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4747 days ago
நாமக்கல்: நாமக்கல், செங்கழநீர் பிள்ளையார் கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நாமக்கல், கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற செங்கழநீர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. சில மாதங்களாக, கோவிலில் திருப்பணிகள் நடந்து வந்தது. அதையடுத்து, ஜனவரி, 18ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த, 17ம் தேதி, கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 4 மணிக்கு, மங்கள இசை, சுப்ரபாதம், வேதபாராயணம், திருமுறை பாராணம் நடந்தது. 4.10 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, காலை, 7 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நாமக்கல் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர்.