உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளையாட்டு மாரியம்மன், முத்து கருப்பர் கோவிலில் திருவிளக்கு பூஜை

விளையாட்டு மாரியம்மன், முத்து கருப்பர் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவை: ராம் நகர் ராஜாஜி ரோடு அருள்மிகு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில் 42-ம் ஆண்டு திருக்கல்யாணஉற்சவம் கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது அடுத்த நிகழ்வாக அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது சித்திரை மாதம் 25 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மூலவர் அம்மன் உற்சவர் அம்மன் ஆகிய இருவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் 12ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து மாவிளக்கு பூஜை மஞ்சள் நீராட்டு அம்மன் திருவீதி உலா அம்மனுக்கு மறு அபிஷேகம் ஆகியன நடைபெற உள்ளது நிறைவு நாளான 15ம் தேதி மகா அன்னதானம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !