அசரீரி என்பதன் பொருள் என்ன?
ADDED :4683 days ago
உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில் சரீரம் என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு சரீரி என்று பெயர். இதைப் போல தேவதைகளுக்கும் உருவம் உண்டு. அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது. இருந்தாலும், பக்தர்களை ஆட்கொள்ளும் விதத்தில் சப்த வடிவில் நம்மோடு தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல் வெறும் ஒலி வடிவில் கேட்பதை அசரீரி என்று குறிப்பிடுகிறோம்.