உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசுவாமிகள் குருபூஜை பெருவிழா மற்றும் பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருத்தாண்டக வேந்தர் திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை பெருவிழா மற்றும் பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி, கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில் நடைபெற்றது. திருமுறை கண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பண்ணிசையோடு திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவார திருப்பதிகங்கள் முற்றோதுதல் நடைபெற்றது. திருநாவுக்கரசு சுவாமிகள் புறப்பாடு, திருப்புகலூர் பெருமானோடு கலத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !