உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

வால்பாறை மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

வால்பாறை: வால்பாறையில், சூலக்கல் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த, மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


வால்பாறை கலைஞர் நகரில் உள்ள சூலக்கல் மாரியம்மன், பாலவிநாயகர், முனீஸ்வரன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி நடைபெற்றது. கடந்த, 48 நாட்களாக நாள் தோறும் மண்டல பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், மண்டல பூஜையின் நிறைவு நாளான இன்று காலை, கணபதி ேஹாமம், அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதன்பின், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் திருமண சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !