திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்போத்சவம்
ADDED :16 hours ago
மாமல்லபுரம்: திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தெப்போத்சவம் கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில் பிரசித்தி பெற்ற, நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம், கொடியேற்றத்துடன், கடந்த மே 1ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போத்சவம் நேற்று இரவு நடந்தது. நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன், கோவிலில் இருந்து, பாசுர முழக்கத்துடன், தீர்த்தகுளம் சென்று, அலங்கார தெப்பத்தில் எழுந்தருளினார்.