உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லம்மாள் காளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்

மல்லம்மாள் காளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளியம்மன், தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் துவங்கிநேற்று காலை வரை யாகசாலை பூஜைகள் நடந்தது. காலைகும்ப கலசநீர் மூலவர்கள், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !