உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் உற்சவம் விருப்பன் திருநாளில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 14ம் தேதி) நடைபெற்றது.


பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா மே 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  மே 16ம் தேதி வரை நடைபெறும் விழாவில் நம்பெருமாள் தினசரி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் ஆறாம் நாளில் யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவில் இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின் தேர் வடம்பிடிக்க பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !