மக்கள் பணிகள் தொடரட்டும் தொண்டை மண்டல ஆதீனம் ஆசி
திருப்பூர்: ‘‘தமிழகத்தில் மக்களுக்கு நல்ல பணிகளை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்,’’ என்று, தொண்டை மண்டல ஆதீனம் தெரிவித்தார்.
தொண்டை மண்டல ஆதீனம், 233 வது பட்டம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் திருப்பூர் அருகேயுள்ள முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது கூறியதாவது:
இந்த பிரபஞ்சத்தில், சிவபெருமான் படைப்பு தொழிலை செய்தாலும் கூட, அம்பாள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. சிவசக்தி சேர்ந்து தான், இந்த பிரபஞ்சத்தை உருவாகியது. குழந்தைக்கு தாய் எப்படி முக்கியமோ. அதுபோன்று, இந்த பிரபஞ்சத்துக்கு அம்பாள் முக்கியம்.
எல்லோரும், எந்த இஷ்ட தெய்வத்தை வழிபாட்டாலும் கூட, குலதெய்வம் ஒன்று உள்ளது. அனைவரும் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதனும், ஊரும், நாடும் உலகமும் நன்றாக இருக்க வேண்டும்.
பல குழப்பங்களுக்கு மத்தியில், தமிழகத்தில் கடவுளின் அருளால், அம்பாளின் அனுகிரஹத்தால், நல்லாட்சி தொடர்ந்து, மக்களுக்கு நல்ல பணிகளை செய்ய இறைவனை வேண்டி கொள்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.