உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலூர் முத்து மாரியம்மன் பொங்கல் விழா

பொங்கலூர் முத்து மாரியம்மன் பொங்கல் விழா

பொங்கலூர்: பொங்கலூர் பெருந்தொழுவு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், 28 ம் ஆண்டு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. தொடர்ந்து பொட்டு சாமி பொங்கல், கம்பம் வெட்டுதல், பொரி மாற்றுதல், அபிஷேக ஆராதனை, கங்கையிலிருந்து கம்பம் கும்பம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை ஈஸ்வரன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், பிள்ளையார் மாகாளியம்மன் பொங்கல் விழா, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னதானம் திருவிளக்கு பூஜை, அம்மை அழைத்தல், படைக்கலம் கொண்டு வருதல், அலங்கார பூஜை ஆகியன நடந்தது. நேற்று புதன்கிழமை காலை பூவோடு கொண்டு வருதல், அம்மன் பொங்கல், மாவிளக்கு எடுத்தல், கம்பம் கும்பம் கங்கைக்கு கொண்டு செல்லுதல் நடந்தது. நாளை காலை மறு பூஜை, மஞ்சள் நீர் விழா, அன்னதானம் நடக்கிறது. பொங்கல் விழாவை ஒட்டி விளையாட்டு போட்டி நடந்தது. இன்று இன்னிசை கச்சேரி கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !