உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளக்காட்டுபாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

சோளக்காட்டுபாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

கருமத்தம்பட்டி: சோளக்காட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரி பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது சோளக்காட்டுபாளையம். இங்குள்ள மாகாளியம்மன் கோவில் பழமையானது. கடந்த வாரம் சாமி சாட்டுதலுடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் கரகம் ஜோடிக்கபட்டு அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !